​​ 2017 ஆம் ஆண்டில் UBER கால்டாக்சி நிறுவனத்தின் நஷ்டம் அதிகரிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2017 ஆம் ஆண்டில் UBER கால்டாக்சி நிறுவனத்தின் நஷ்டம் அதிகரிப்பு

2017 ஆம் ஆண்டில் UBER கால்டாக்சி நிறுவனத்தின் நஷ்டம் அதிகரிப்பு

Feb 14, 2018 6:48 PM

2017 ஆம் ஆண்டில் உபேர் கால்டாக்சி நிறுவனத்தின் நஷ்டமானது 61 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் இயங்கிவரும் வாடகை கார் நிறுவனமான உபேர், கடந்த 2016ல், 280 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்தது. கடந்த ஆண்டில் நஷ்டம் 450 கோடி டாலராக உயர்ந்தது. இருப்பினும் மூன்றாம் காலாண்டை விட, நான்காம் காலாண்டில் நஷ்டம் குறைக்கப்பட்டுள்ளதாக உபேர் தெரிவித்துள்ளது. வரும் 2019 ஆண்டில் வருவாய் ஈட்டும் வகையில் நிர்வாக சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உபேர் நிறுவனம் கூறியுள்ளது.