​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விவசாய கடன் தள்ளுபடிக்கான நிதியை ஒரே தவணையில் அளிக்கிறோம்

Published : Jun 13, 2019 6:58 AM

விவசாய கடன் தள்ளுபடிக்கான நிதியை ஒரே தவணையில் அளிக்கிறோம்

Jun 13, 2019 6:58 AM

விவசாயிகளின் கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்யும் உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது.

இதற்கான முழுத் தொகையையும் ஒரே நிலுவையில் செலுத்தப் போவதாக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார். முன்பு நான்கு தவணைகளில் விவசாயக் கடன்கள் தீர்க்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்திருந்தது. இதுவரை பல்வேறு வங்கிகளில் விவசாயிகள் பெயரில் உள்ள கடன் தொகை 8 ஆயிரத்து 550 கோடி ரூபாயாகும்.

இதுவரை கர்நாடக அரசு 3 ஆயிரத்து 930 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்ததில் ஏழு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். புதிய அறிவிப்பால் மேலும் 4 ஆயிரத்து 620 கோடி ரூபாயை வங்கிகளுக்கு அரசு செலுத்த வேண்டியிருக்கும். கூட்டுறவு வங்கிக் கடன்களில் இதுவரை எட்டாயிரத்து 759 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு இதன் மூலம் 19 லட்சம் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்.