​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காதலியை வரவழைப்பதற்காக விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டல் கடிதம் வைத்த தொழிலதிபர்

Published : Jun 12, 2019 9:33 AM

காதலியை வரவழைப்பதற்காக விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டல் கடிதம் வைத்த தொழிலதிபர்

Jun 12, 2019 9:33 AM

விமானத்தை கடத்தப் போவதாக உள்நோக்கத்துடன் மிரட்டல் விடுத்த மும்பை தொழிலதிபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும் 5 கோடி ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த அக்டோபர் 30ம் தேதி மும்பையில் இருந்து டெல்லி செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் கழிவறை பெட்டியில் உருதுவிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட மிரட்டல் கடிதத்தை வைத்ததாக பிர்ஜூ சல்லா என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலையும் பீதியையும் ஏற்படுத்தியதாக அவர் மீது தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி சல்லாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தார்.