​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ 2000 கோடி வசூலித்து தலைமறைவான நிதி நிறுவன உரிமையாளர்

Published : Jun 12, 2019 9:30 AM

ரூ 2000 கோடி வசூலித்து தலைமறைவான நிதி நிறுவன உரிமையாளர்

Jun 12, 2019 9:30 AM

பெங்களூரில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நிதி நிறுவன அதிபர் முகமது கான், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் 400 கோடி ரூபாய் பணத்தை வாங்கி திருப்பித் தராததால் தாம் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

பெங்களூரில் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படும் நிதி நிறுவனத்தின் உரிமையாளர் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக வீடியோவில் மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு நிலவியது. நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்கள் IMA என்ற இஸ்லாமிய வங்கியின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிறுவனம் 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைத் திரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் உரிய நேரத்தில் பணத்தை முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தராததால் கடந்த சில மாதங்களாக கடும் சிக்கல் நீடித்து வந்தது.  தங்கள் பணத்தை மீட்டுத் தரக் கோரி 4 ஆயிரம் பேர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இதன் உரிமையாளரான முகமது மன்சூர் கான் வெளியிட்ட வீடியோ பதிவில், அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டதால் தாம் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். சிவாஜி நகர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரோஷன் பேக் இந்த நிதிநிறுவனத்திடமிருந்து 400 கோடி ரூபாய் பணத்தை பெற்று திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் பணத்தைத் திருப்பிக் கேட்ட தம்மை கொலை செய்யப்போவதாக ரவுடிகளை அனுப்பி மிரட்டியதாகவும் மன்சூர் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால் தற்போது டெல்லியில் உள்ள எம்.எல்.ஏ ரோஷன் பேக் தம் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இப்பிரச்சினை குறித்து கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அமைச்சர்கள் மற்றும் அகமது பட்டேல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.