​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாங்கிய கடனுக்காக இளைஞரை கடத்தி துன்புறுத்திய அமமுகவினர்

Published : Jun 12, 2019 9:27 AM

வாங்கிய கடனுக்காக இளைஞரை கடத்தி துன்புறுத்திய அமமுகவினர்

Jun 12, 2019 9:27 AM

சென்னையில், வாங்கிய கடனுக்காக இளைஞரை காரில் கடத்தி அரிவாளால் தாக்கி துன்புறுத்திய அமமுக-வைச் சேர்ந்த இருவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மண்ணடியை சேர்ந்த ரஜீ ஷேக் ஜான் என்பவர் வேளச்சேரியில் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். இவரை காணவில்லை எனவும், பாஸ்கர் என்பவர் கடத்தி இருக்கக்கூடும் எனவும் வேளச்சேரி காவல் நிலையத்தில் அவரின் தந்தை பல்கீஸ் புகார் அளித்தார்.

இதையடுத்து, ரஜீ ஷேக் ஜானின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். விசாரணையில், அமமுக வேளச்சேரி மாணவரணி பகுதிச் செயலாளர் பாஸ்கர் என்பவரிடம், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும் அதனை திருப்பி தராததால் ரஜியைக் கடத்திச் சென்று துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பாஸ்கரின் செல்போன் சிக்னலை வைத்து அவரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்த போலீசார் ரஜி கடத்தல் தொடர்பாக அமமுக பிரமுகர்களான ஏழுமலை, கார்த்திக், பச்சுராஜன் மற்றும் பிரகாஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.