​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம்

Published : Jun 12, 2019 9:23 AM



டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம்

Jun 12, 2019 9:23 AM

பிரதமர் மோடி தலைமையிலான ஒட்டுமொத்த அமைச்சரவையின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

காலையில் கேபினட் அமைச்சர்களின் இரண்டாவது கூட்டம் முதலில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து ஒட்டு மொத்த அமைச்சர்களும் பங்கேற்கும் அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கேபினட் அமைச்சர்கள் தங்களது இணையமைச்சர்களுக்கு உரிய இலாகாகளை பிரித்து வழங்குவது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதே போன்று மத்திய அரசின் திட்டங்களை உடனடியாக அமல்படுத்த அமைச்சர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, பிரதமர் மோடி எடுத்துரைப்பார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில் முத்தலாக் மசோதாவை நிறைவேற்றுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.