​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தலைகவசம் அணியாமல் வந்து சிக்கிய உதவி ஆய்வாளர்

Published : Jun 11, 2019 9:58 PM

தலைகவசம் அணியாமல் வந்து சிக்கிய உதவி ஆய்வாளர்

Jun 11, 2019 9:58 PM

சென்னையில் தலைகவசம் அணியாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளை பிடித்து விழிப்புணர்வு செய்து வந்த போது தலைகவசம் அணியாமல் வந்த உதவி ஆய்வாளரை போக்குவரத்து போலீசார் பிடித்தனர்.

சென்னை மெரினா மற்றும் கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தலைகவசம் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்த போலீசார் விழிப்புணர்வு பதாகைகள், காணொலிகள் அமைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் அமர வைத்து விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கி பலியானவர்கள் தொடர்பான வீடியோக்களும் அவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வில் ஈடுபட்டிருந்த போது மெரினா காமராஜர் சாலையில் தலைகவசம் அணியாமல் சீருடையில் வந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவரை போக்குவரத்து காவல் அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.

தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டும் காவல் துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் ஆணையர் எச்சரித்திருந்தார். இந்த நிலையில் தலைகவசம் அணியாமல் வந்த உதவி ஆய்வாளர் குறித்த விவரங்களை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.