​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2024 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர்

Published : Jun 11, 2019 6:36 PM

2024 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர்

Jun 11, 2019 6:36 PM

2024 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் தெரிவித்துள்ளார்.

ஏறத்தாழ 14 கோடி குடும்பங்களுக்கு இன்னும் சுத்தமான நீர் கிடைக்காத நிலை இருப்பதாக அவர் கூறினார்.

அனைத்து குடும்பத்திற்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையிலும் உறுதி அளிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்படும் என்றார்.

உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சத்திஷ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் சுத்தமான குடிநீரின் விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருப்பதாக அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் தெரிவித்தார்.