​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிக்காதீர் - மம்தா பானர்ஜி

Published : Jun 11, 2019 6:35 PM

தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிக்காதீர் - மம்தா பானர்ஜி

Jun 11, 2019 6:35 PM

தமிழ்நாட்டில் மிகச்சிலரின் தேவைக்கான இந்தி மொழியை, ஏன் அனைவரும் படிக்க வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் ம ம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பது என்பது, வேற்றுமையில் ஒற்றுமை என்ற நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்துவிடும் என்றும் மம்தா எச்சரித்திருக்கிறார்.

மக்களவைத் தேர்தல் நேரத்தில், கொல்கத்தாவில், அமித் ஷா நடத்திய பேரணியின்போது வன்முறை ஏற்பட்டு, வங்கத்து சீர்திருத்தவாதி ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் சிலை சேதப்படுத்தப்பட்டது.

இதற்கு பதிலாக, புதிய சிலை எடுத்து வரப்பட்ட பிரம்மாண்ட ஊர்வலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அரசியல் கட்சியினர், எழுத்தாளர்கள், வங்க மொழி சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முடிவில், கொல்கத்தா வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்ட வித்யாசாகர் சிலைக்கு, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.