​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிபா வைரஸ் அறிகுறியுடன் கடலூரைச் சேர்ந்தவர் அனுமதி..!

Published : Jun 11, 2019 6:31 PM

நிபா வைரஸ் அறிகுறியுடன் கடலூரைச் சேர்ந்தவர் அனுமதி..!

Jun 11, 2019 6:31 PM

கேரள மாநிலத்தில் பணியாற்றி வரும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கடலூர் மாவட்டம் உருளைமேட்டில் உள்ள அம்மன் கோயிலைச் சேர்ந்த ஒருவர், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பணியாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்கு வந்த அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும் காய்ச்சலின் தீவிரம் குறையவில்லை. கேரளாவில் பணியாற்றுபவர் என்பதால், நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் ஐயமுற்றனர்.

இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், நிபா வைரஸ் சிகிச்சைக்கான பிரத்யேக பிரிவில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை மாலையில் தான், ரத்த பரிசோதனை முடிவுகள் தெரியவரும் என ஜிப்மர் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.