​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இந்தியா வருகிறார்

Published : Jun 11, 2019 12:03 PM



அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இந்தியா வருகிறார்

Jun 11, 2019 12:03 PM

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ ((Michael Pompeo)), இம்மாத இறுதியில் இந்தியா வருகிறார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின், இந்தோ-பசிபிக் மண்டலத்திற்கான செயல்திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியாவுக்கு செல்லவிருப்பதாக, வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார். மைக் பாம்பியோவின் ஆசிய பயணம் ஜூன் 24ஆம் தேதி தொடங்குவதாகவும், முதலில் இந்தியா செல்லும் அவர் பின்னர் இலங்கைக்கு செல்ல இருப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்கன் ஆர்ட்டேகஸ் ((Morgan Ortagus)) தெரிவித்துள்ளார்.

இலங்கையைத் தொடர்ந்து, ஜி-20 உச்சிமாநாடு நடைபெறும் ஜப்பானின் ஒசாகா நகருக்கு பாம்பியோ செல்வதாகவும் மார்கன் ஆர்ட்டேகஸ் கூறியுள்ளார்.