​​ 28வது ஆண்டாக வளர்ச்சிப் பாதையில் ஜப்பான் பொருளாதாரம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
28வது ஆண்டாக வளர்ச்சிப் பாதையில் ஜப்பான் பொருளாதாரம்


28வது ஆண்டாக வளர்ச்சிப் பாதையில் ஜப்பான் பொருளாதாரம்

Feb 14, 2018 4:18 PM

28 ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் ஜப்பான் பொருளாதாரம், கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் பூஜ்யம் புள்ளி 5 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது.

1980ஆம் ஆண்டு முதல் ஜப்பான் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட்டுவருகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் – டிசம்பர் இடையிலான நான்காவது காலாண்டில் ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி பூஜ்யம் புள்ளி 5 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதனால், நுகர்வோரின் வாங்கும் திறன் கூடியுள்ளதாகவும் ஜப்பான் வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த ஆண்டுமட்டும் ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி ஒன்று புள்ளி 6 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், நடப்பாண்டில் இது இன்னும் உயரும் என்றும் ஜப்பான் வங்கி கூறியுள்ளது.