​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கனேடியன் கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் ஹாமில்டன் வெற்றி

Published : Jun 10, 2019 7:50 AM

கனேடியன் கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் ஹாமில்டன் வெற்றி

Jun 10, 2019 7:50 AM

கனேடியன் கிராண்ட்பிரி கார் பந்தயத்தில் பிரிட்டன் வீரர் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

நடப்பு சீசனில் 7வது பந்தயம் கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடைபெற்றது. தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்ற பெராரி அணியின் செபஸ்டியன் வெட்டல் நேற்றைய போட்டியிலும் முதலிடத்தில் வந்தார். ஆனால், தடம் மாறியும், பாதுகாப்பற்ற முறையில் இயக்கியதற்காகவும் அவருக்கு 5 வினாடிகள் அபராதமாக விதிக்கப்பட்டது.

இதையடுத்து அவருக்கு அடுத்தபடியாக வந்த மெர்சிடஸ் அணியின் ஹாமில்டன் சாம்பியனாக அறிவிக்கப்பட்டார். நடப்பு சீசனில் 5 பந்தயங்களில் அவர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.