​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கர்நாடக விவசாய அமைப்புகள் இன்று போராட்டம்

Published : Jun 10, 2019 7:45 AM



கர்நாடக விவசாய அமைப்புகள் இன்று போராட்டம்

Jun 10, 2019 7:45 AM

கர்நாடகத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று விவசாயிகள் சங்கங்கள்  போராட்டம் நடத்துகின்றன.

பெங்களூரில் இருந்து தமிழகம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உட்பட அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் போராட்டம் நடைபெறுவதால், சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன.

போராட்டம் காரணமாக தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டம் அமைதியான முறையில் நடைபெறவும் வன்முறை அசம்பாவிதங்கள் நடைபெறாதிருக்கவும் பெங்களூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.