​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் துணி வைத்து தைத்த கொடுமை

Published : Jun 10, 2019 7:44 AM



பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் துணி வைத்து தைத்த கொடுமை

Jun 10, 2019 7:44 AM

ஓசூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்து விட்டதாக குற்றம் சாட்டி பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். 

ஓசூரைச் சேர்ந்த ராகவேந்திரன் என்பவரின் மனைவியான கவிதா மூன்று மாதங்களுக்கு முன்பு ஆண்குழந்தையை பெற்றெடுத்தார். பிரசவத்திற்குப் பின்பு கவிதாவுக்கு கடும் வயிற்று வலி இருந்ததால் ஸ்கேன் செய்து பார்த்த போது வயிற்றுக்குள் மருத்துவர்கள் பயன்படுத்தும் முக கவசம் ஒன்று இருப்பது தெரிந்தது.

அதிர்ச்சியடைந்த கவிதா ஓசூர் அரசு மருத்துவமனையின் கவனக்குறைவால் நடந்திருப்பதாக கூற அவருடைய உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

ஓசூர் -தேன்கனிக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து கவிதாவை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.