​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
3 நாட்களாக 150 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவிக்கும் 2 வயது குழந்தை

Published : Jun 10, 2019 7:41 AM

3 நாட்களாக 150 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவிக்கும் 2 வயது குழந்தை

Jun 10, 2019 7:41 AM

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பகவான்புரா கிராமத்தில் 150 அடி ஆழமுடைய ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்ட 2 வயது குழந்தையை  உயிருடன் மீட்பதற்கான போராட்டம் மூன்றாவது நாளாக நடைபெறுகிறது.

கிராமத்தில் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றின் மீது சாக்குப்பையை போட்டு மூடிவைத்ததால், அந்தக் குழந்தை அதன் மீது கால்வைக்க அது கிணற்றில் விழுந்துவிட்டது.  தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உள்பட சுமார் 700 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குழந்தையை நெருங்கிவிட்டதாகவும் இன்று எப்படியும் குழந்தையை வெளியே எடுத்து விடுவோம் என்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.