​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ1.56 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொள்ளையனை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

Published : Jun 09, 2019 9:15 PM

ரூ1.56 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொள்ளையனை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

Jun 09, 2019 9:15 PM

சென்னையில் கடந்த மாதம் தொழிலதிபர் வீட்டில் 1.56 கோடி கொள்ளையடித்து அதை கோட்டூர்புரம் ரோந்து போலீசாரை பார்த்ததும் வீசி விட்டுச் சென்ற கொள்ளையனை பிடிக்க போலீசார் திணறி வருகின்றனர்.

கடந்த மாதம் 27-ம் தேதி கோட்டூர்புரத்தில் மூன்று தலையணை மூட்டைகளில் பணத்தை எடுத்துச் சென்ற கொள்ளையன் ரோந்து போலீசார் விரட்டியதில் பணத்தை வீசியெறிந்து விட்டுச் சென்றான்.

தலையணை உறையில் இருந்த 1.56 கோடி ரூபாய் யாருடையது என விசாரணை நடத்தி வந்த நிலையில், நந்தனம் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கொள்ளை சம்பவம் நடந்த பகுதியிலும் உள்ள சிசிடிவி கேமராவிலும் கொள்ளையன் செல்லும் காட்சிகளை விசாரணை நடத்தி வரும் சைதாப்பேட்டை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

கொள்ளை நடந்து 14 நாட்களாகியும் இது வரை கொள்ளையன் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. தனிப்படை அமைத்தும் போலீசார் கொள்ளையனை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.