​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசிரியர் தகுதித் தேர்வை 40,640 பேர் எழுதவில்லை

Published : Jun 09, 2019 9:08 PM

ஆசிரியர் தகுதித் தேர்வை 40,640 பேர் எழுதவில்லை

Jun 09, 2019 9:08 PM

ஆசிரியர் தகுதித் தேர்வை 40 ஆயிரத்து 640 பேர் எழுதவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மொத்தம் 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்து இருந்தனர். முதல் தாள் தேர்வு சனிக்கிழமை நடைபெற்ற நிலையில், 2-ம் தாள் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது.

இந்நிலையில், தமிழகத்தில் 1,081 மையங்களில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 40,640 பேர் எழுதவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்த 4,20,957 பேரில் 3,80,317 பேர் தேர்வு எழுதினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.