​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஸி. அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா

Published : Jun 09, 2019 8:03 PM

ஆஸி. அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா

Jun 09, 2019 8:03 PM

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 352 ரன்கள் எடுத்தது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கி நிதானமாக ரன் சேர்த்தனர்.

சிறப்பாக விளாயாடிய ரோகித் சர்மா 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு புறம் அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தினார்.

அடுத்து களம் இறங்கிய கேப்டன் விராட் கோலியும் ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் அணியின் ஸ்கோர் 220 ரன்களாக இருந்த போது 117 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவான் ஆட்டமிழந்தார்.

பின்னர் இறங்கிய ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். கோலி, ஹர்த்திக் பாண்ட்யா அதிரடியால் இந்திய அணி 300 ரன்களை கடந்தது. உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி முதல்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 300 ரன்களை கடந்தது குறிப்பிடத்தக்கது. இறுதியாக களமிறங்கிய தோனியும் அதிரடியாக ஆட இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்தது.

353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.