​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அறைக்குள் பேச வேண்டியதை வெளியில் பேசுவது நல்லதல்ல: அமைச்சர் செங்கோட்டையன்

Published : Jun 09, 2019 2:13 PM



அறைக்குள் பேச வேண்டியதை வெளியில் பேசுவது நல்லதல்ல: அமைச்சர் செங்கோட்டையன்

Jun 09, 2019 2:13 PM

அறைக்கும் அமர்ந்து பேச வேண்டிய விவகாரங்களை வெளியில் பேசுவதால், கட்சிக்குள் தேவையில்லா கலகம் தான் ஏற்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

அதிமுகவின் இரட்டைத் தலைமை முறையால் யாருக்கு அதிகாரம் என்று குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒற்றைத் தலைமையின் கீழ் கட்சியை கொண்டு வர பொதுக்குழுவை உடனடியாக கூட்டி பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அக்கட்சி எம்எல்ஏ ராஜன்செல்லப்பா கூறியிருந்தார்.

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் கோஷ்டிப் பூசல் ஏதும் இல்லை என்றும்,அதிமுகவில் தலைவர் பதவி என்ற சொல்லுக்கே இடமில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் ராஜன்செல்லப்பா கருத்து பற்றி கேட்கப்பட்டது. அறைக்குள் பேசி விவாதிக்க வேண்டிய கருத்துகளை, வெளியில் பேசுவது நல்லதல்ல என்றும், அந்த போக்கு தொடர்ந்தால், அது கட்சிக்குள் கலகத்தை ஏற்படுத்தும் என்றும் செங்கோட்டையன் பதிலளித்தார்.