​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத் தேதி அறிவிப்பு

Published : Jun 09, 2019 11:57 AM



அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத் தேதி அறிவிப்பு

Jun 09, 2019 11:57 AM

சென்னையில், அதிமுக தலைமை அலுவலகத்தில், இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில், வருகிற 12ஆம் தேதி, மாவட்டச் செயலாளர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

image

அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையில், கட்சியின் தலைமை அலுவலத்தில், புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், செய்தித் தொடர்பாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. 

அனைவருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள தனித்தனியே கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாகவும், தங்களுக்குரிய அழைப்பிதோடு, தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும், தெரிவிக்கப்பட்டிருக்கிறது.