​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் இன்று நடைபெற்று வருகிறது

Published : Jun 09, 2019 11:44 AM



ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் இன்று நடைபெற்று வருகிறது

Jun 09, 2019 11:44 AM

ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் நேற்று நடைபெற்ற நிலையில், இரண்டாம் தாளுக்கான தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் ஆயிரத்து 81 மையங்களில், 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேர் இரண்டாம் தாளுக்கான தேர்வை எழுதி வருகின்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு, மதியம் 1 மணியளவில் நிறைவடையவுள்ளது.

தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தாண்டுக்கான தகுதித்தேர்வின் முதல் தாள் நேற்று நடைபெற்ற நிலையில், வினாத்தாள் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று நடைபெறும் 2ம் தாளுக்கான தேர்வை மதுரை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 992 பேரும், நெல்லை மாவட்டத்தில் 18 ஆயிரத்து 949 பேரும் எழுதி வருகின்றனர்.