​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காதலன் கைவிட்டதால் மனம் உடைந்த இளம் பெண்

Published : Jun 09, 2019 7:37 AM



காதலன் கைவிட்டதால் மனம் உடைந்த இளம் பெண்

Jun 09, 2019 7:37 AM

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காவல் நிலையம் அருகே தன் மீது மண் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு உண்டானது. ஆட்கொண்டான் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த திவ்யா என்பவர், தான் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ராஜதீபன் என்பவர் வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்ததால் மனம் உடைந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டார்.

மண் எண்ணெய் கேனுடன் வந்த அவர் தன்னை எரித்துக் கொள்ள முயன்ற போது தக்க சமயத்தில் மகளிர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணவேணி திவ்யாவை காப்பாற்றி அழைத்துச் சென்றார்.இதையடுத்து ராஜன் தீபனை மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.