​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தபட மாட்டாது - அமைச்சர் தங்கமணி

Published : Jun 08, 2019 7:31 PM

தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தபட மாட்டாது - அமைச்சர் தங்கமணி

Jun 08, 2019 7:31 PM

தமிழ்நாட்டில், மின்சார கட்டணத்தை உயர்த்தும் எந்த திட்டமும், அரசிடம் இல்லை என்று, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

நாமக்கல் மாவட்ட பொது மக்களின் பயன்பாட்டிற்காக "நம்காவல்" என்ற செயலியையும், காவல்துறையினர் பயன்பாட்டிற்காக "COPS EYE" என்ற செயலியையும், அமைச்சர் தங்கமணி, தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்சார வாரியத்தில், பணிநியமனம் பெற்றுள்ள வெளிமாநிலங்களைச் சேர்ந்த 46 பேர், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் தமிழை கற்றுத் தேர்ந்திடாவிட்டால், பணியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள் என்றார். தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என்றும் அவர் கூறினார்.