​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இயற்கை முறையில் மாம்பழங்களை விளைவித்து விற்பனை செய்யும் விவசாயி

Published : Jun 08, 2019 7:22 PM



இயற்கை முறையில் மாம்பழங்களை விளைவித்து விற்பனை செய்யும் விவசாயி

Jun 08, 2019 7:22 PM

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே விவசாயி ஒருவர் இயற்கை முறையில் மாம்பழங்களை விளைவித்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார். 

image

திருவள்ளூர் மாவட்டம் திருநிலையைச் சேர்ந்த விவசாயி ஜனார்த்தனனின் மாந்தோட்டத்துக்குள் நுழைகையில் கொத்துக்கொத்தாக காய்த்துத் தொங்கும் மாம்பழங்கள் கண்ணை கவர்கின்றன. தனக்குச் சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் பங்கனபள்ளி, ஜவ்வாது, காசர் உட்பட 10 வகையான மாமரங்களை இயற்கை உரங்களைப் பயன்படுத்தி வளர்த்து வருகிறார் ஜனார்த்தனன்.

12 ஆண்டுகளாக மாமர விவசாயம் செய்து வருவதாகக் கூறும் ஜனார்தனன், இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வருவதால் மாம்பழங்கள் தனிச்சுவையுடன் இருப்பதாகக் கூறுகிறார். தோட்டத்து மாம்பழங்களை சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்வதாகக் கூறுகிறார் அவர்.

image

மரத்துக்கு அடியுரமாக இயற்கை உரங்களை இடுவதோடு, மரத்தில் பூ வந்தவுடன் உதிராமல் இருக்க புளித்த மோரை அதன் மீது தெளிப்பதாகக் கூறுகிறார் ஜனார்தனன். மாட்டு சாணம், கோமியம், வெல்லம் உள்ளிட்டவற்றின் கலவையான ஜீவார்மித கலவையை தெளிப்பதாவும் அவர் குறிப்பிடுகிறார்.

ரசாயன உரங்களைப் பயன்படுத்தி அந்த நுண்ணுயிரிகளை அழிக்காமல் இயற்கை உரங்களையே பயன்படுத்த அனைத்து விவசாயிகளும் முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு...