​​ சீனாவில் சாலை நடுவே காரில் இருந்த பட்டாசுகள் வெடித்ததால் பரபரப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவில் சாலை நடுவே காரில் இருந்த பட்டாசுகள் வெடித்ததால் பரபரப்பு


சீனாவில் சாலை நடுவே காரில் இருந்த பட்டாசுகள் வெடித்ததால் பரபரப்பு

Apr 16, 2018 9:27 PM

சீனாவில் காரில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அந்நாட்டின் சீஜாங் பிராந்தியத்தில் உள்ள ஈவு நகரில் சாலை சந்திப்பு ஒன்றில் கார் ஒன்று சிக்னலுக்காக காத்திருந்தது.  காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் பிடித்த சிகரெட் நெருப்பின் பொறி விழுந்ததில், காரில் இருந்த பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்தன.

இதனால் பின் இருக்கையில் இருந்த இருவர் தப்பி ஓட, முன் இருக்கையில் இருந்தவர்கள் பட்டாசு வெடிப்பதை தடுக்க முயன்றனர். ஆனால்  பட்டாசுகளில் தீ பற்றிக் கொண்டதால் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் இப்போது வெளியாகி உள்ளன.