​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிரியாவில் பயங்கரவாதிகள், ராணுவம் இடையே கடும் சண்டை

Published : Jun 08, 2019 5:44 PM

சிரியாவில் பயங்கரவாதிகள், ராணுவம் இடையே கடும் சண்டை

Jun 08, 2019 5:44 PM

சிரியாவில் அரசு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் ராணுவ வீரர்கள் 21 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டில் அல்-கொய்தா அமைப்பின் ஆதரவு பெற்ற ஹயாத்தாஹிர் அல்ஷாம் பயங்கரவாதிகளுக்கும், அரசு படைகளுக்கும் இடையே ஹமா மாகாணத்தின் ஜிபீன் நகரில் பயங்கர மோதல் மூண்டது. இருதரப்புக்கும் இடையே நீண்ட நேரம் கடுமையான சண்டை நடந்தது.

இதில் ராணுவ வீரர்கள் 21 பேர் பலியாகினர். அதே போல் பயங்கரவாதிகள் தரப்பில் 14 பேர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது.