​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரேஷன் பொருட்கள் கிடைக்காததால் பட்டினியில் முதியவர் உயிரிழப்பு

Published : Jun 08, 2019 5:39 PM

ரேஷன் பொருட்கள் கிடைக்காததால் பட்டினியில் முதியவர் உயிரிழப்பு

Jun 08, 2019 5:39 PM

ஜார்க்கண்ட் மாநிலத்தில், 3 மாதமாக ரேசன் பொருட்கள் கிடைக்காத நிலையில், 65 வயது முதியவர் ஒருவர் பட்டினியால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த மாநிலத்தின் லதேகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்சரண் முண்டா. தினக்கூலி வேலை பார்த்து வந்தார். ரேசனில் கிடைக்கும் உணவுப்பொருட்களையே அவர் பெரிதும் நம்பியிருந்தார். ஆனால், நெட்வொர்க் பிரச்சனை காரணமாக ரேசன் கடையில் உள்ள பயோமெட்ரிக் மிஷின் மூன்று மாதங்களாக வேலை செய்யவில்லை. இதனால் ரேசன் பொருட்கள் கிடைக்காமல் அவர், சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டார்.

இந்நிலையில், ராம்சரண் முண்டா வெள்ளிக்கிழமை அன்று உயிரிழந்தார். ரேசன் பொருட்கள் கிடைக்காததால் அவர் பட்டினியால் இறந்ததாக அந்த கிராம மக்கள் புகார் கூறியுள்ளனர். ஆனால், இதனை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.