​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தாகம் தீர்க்கும் ரயில்வே கிணறு..!

Published : Jun 08, 2019 5:26 PM

தாகம் தீர்க்கும் ரயில்வே கிணறு..!

Jun 08, 2019 5:26 PM

சென்னை பல்லாவரம் அருகே ஆங்கிலேயர் காலத்தில் நீராவி எஞ்சின் தேவைக்காக தோண்டப்பட்ட கிணறு ஒன்று, தற்போது அப்பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாக திகழ்ந்து வருகிறது.

சென்னை துறைமுக கட்டுமானப் பணிக்காக ஆங்கிலேயர் காலத்தில் திரிசூலம் மலையில் இருந்து நீராவி எஞ்சின் மூலம் பாறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த நீராவி எஞ்சினின் பயன்பாட்டுக்காக பல்லாவரம் 6வது வார்டு ஈஸ்வரி நகரில் 60 அடி ஆழத்துக்கு இந்தக் கிணறு தோண்டப்பட்டுள்ளது.

காலப்போக்கில் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட இந்தக் கிணற்றை 1975ல் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தின்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ரயில்வே நிர்வாகம் வழங்கியது.

அன்று முதல் இன்று வரை ஈஸ்வரி நகர் மக்களின் தாகத்தை தீர்த்து வருகிறது இந்தக் கிணறு. டோக்கன் முறையில் காலை 40 குடும்பங்களுக்கும் மாலை 30 குடும்பங்களுக்கும் என தண்ணீர் எடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது.