​​ அறிவிக்கப்பட்டதற்கு 14 மணி நேரத்திற்கு முன்பே ஜெயலலிதா மரணமடைந்திருக்க வாய்ப்பு - குறுக்கு விசாரணையில் மருத்துவர் சுதாசேஷய்யன் கூறியதாக தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அறிவிக்கப்பட்டதற்கு 14 மணி நேரத்திற்கு முன்பே ஜெயலலிதா மரணமடைந்திருக்க வாய்ப்பு - குறுக்கு விசாரணையில் மருத்துவர் சுதாசேஷய்யன் கூறியதாக தகவல்

அறிவிக்கப்பட்டதற்கு 14 மணி நேரத்திற்கு முன்பே ஜெயலலிதா மரணமடைந்திருக்க வாய்ப்பு - குறுக்கு விசாரணையில் மருத்துவர் சுதாசேஷய்யன் கூறியதாக தகவல்

Apr 16, 2018 9:15 PM

உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதற்கு 14 மணி நேரத்திற்கு முன்பே ஜெயலலிதா  மரணமடைந்திருக்க வாய்ப்பிருப்பதாக  மருத்துவர் சுதா சேஷய்யன் கூறியுள்ளார்.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சாட்சி அளித்த அவர் உள்ளிட்ட 8 பேரிடம் நடத்திய குறுக்கு விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம்  பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூரபாண்டியன், இதனை கூறியுள்ளார்.  ஜெயலலிதா உடலில் காயங்கள் எதுவும் இல்லை என  சுதா சேஷய்யன் தெரிவித்ததாக அவர்  கூறினார். 

டிசம்பர் 4ம் தேதி காலையில்  ஜெயலலிதாவின் இதயத்துடிப்பு நன்றாக இருந்ததாக  அரசு மருத்துவரான சுவாமிநாதன்  கூறியுள்ளார். விசாரணையில் ஆஜரான ஜெயலலிதாவின் தனிச் செயலாளர் வெங்கட்ரமணன், காவிரி விவகாரம் தொடர்பான ஆலோசனையில் ஜெயலலிதா பங்கேற்றதாக குறிப்பிட்டுள்ளார்.