​​ பேராசிரியை நிர்மலா தேவி கைது, IAS அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேராசிரியை நிர்மலா தேவி கைது, IAS அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு


பேராசிரியை நிர்மலா தேவி கைது, IAS அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு

Apr 16, 2018 8:19 PM

மாணவிகளை தவறான பாதைக்கு நிர்பந்தித்த, பேராசிரியை நிர்மலா தேவியை  போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியின் கணிதப் பேராசிரியையான நிர்மலா தேவி, 4 மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ வெளியானதால், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் கண்டனக் குரல்கள் எழுந்தது.

image

இன்று காலை தேவாங்கர் கல்லூரி முன்பாக மகளிர் அமைப்புகளும், மாணவர் அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து கல்லூரிக்கு சென்ற வட்டாட்சியர்,  ஏ.டி.எஸ்.பி. மதி, டி.எஸ்.பி. தனபால் உள்ளிட்டோர் பேராசிரியை மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விசாரணை நடத்தினர்.

அதன் பின்னர் கல்லூரி முதல்வர் பேராசிரியை நிர்மலா தேவி மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, ஏ.டி.எஸ்.பி. மதி தலைமையிலான போலீசார் அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டிற்கு சென்றனர்.

image

அங்கு சென்று பேராசிரியையிடம் விசாரணை நடத்த முற்பட்ட போது, வீட்டுக்குள் இருந்து நிர்மலா தேவி வெளியே வர மறுத்துவிட்டார். இதையடுத்து சுமார் 5 மணி நேரத்திற்குப் பின், பத்திரிக்கையாளர்களை அப்புறப்படுத்தி விட்டு  போலீசார், நிர்மலாவை  கைது செய்துள்ளனர். 

ஆளுநர் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், அருப்புக்கோட்டை கல்லூரியில் நடைபெற்ற முறையற்ற நடவடிக்கைகள் குறித்து ஊடகங்கள் வாயிலாக அறியவந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இது போன்ற சம்பவங்கள் உடனடியாக பாரபட்சத்திற்கு இடமின்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிவிடக்கூடாது என்றும் அறிக்கையில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற முறையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் விசாரணை நடத்தவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். ஆர்.சந்தானம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர் ஆவார்.