​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டை

Published : Jun 08, 2019 1:06 PM



தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டை

Jun 08, 2019 1:06 PM

காஷ்மீர் மாநிலத்தில் தேடுதல் வேட்டையின்போது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

அனந்தநாக் மாவட்டம் வெரிநாக் (( Verinag)) என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் ராணுவத்தினரும், போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அப்போது, பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் துப்பாக்கிச் சண்டை மூண்டது.

இதில் இக்பால் அகமது என்ற ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் வேறு தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அனந்த்நாக் மாவட்டத்தில் மொபைல் மற்றும் இணையதள சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.