​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மின்சாரம் தாக்கி தந்தை - மகன் உயிரிழந்த சோகம்

Published : Jun 08, 2019 12:40 PM



மின்சாரம் தாக்கி தந்தை - மகன் உயிரிழந்த சோகம்

Jun 08, 2019 12:40 PM

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மின்சாரம் தாக்கியதில் தந்தை மகன் இருவர் உயிரிழந்தனர். அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் சௌந்தரராஜனின் மகன் கெளதம்.

இவர் இன்று காலை வீட்டில் கழிவறை செல்வதற்கு மின்விளக்கு போடுவதற்காக மின்சார சுவிட்சை அழுத்தினார். பாதுகாப்பற்றமுறையில் சுவிட்ச் பாக்ஸ் இருந்ததால் அதில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது . அதை கவனிக்காமல் அவர் சுவிட்சை அழுத்தியதில் மின்சாரம் தாக்கி அலறினார்.

சத்தம் கேட்டு தந்தை செளந்தரராஜன் ஓடி வந்து மகனை காப்பாற்றுவதற்காக தொட்ட போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில், தந்தை மகன் இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மின்கசிவு இருப்பதை அறிந்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அவர்கள் விரைந்து வந்து மின்இணைப்பை துண்டித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரும் மின்வாரிய அதிகாரிகளும் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.