​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்களை விசாரிக்கும் விவகாரம்

Published : Jun 08, 2019 10:19 AM



தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்களை விசாரிக்கும் விவகாரம்

Jun 08, 2019 10:19 AM

தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்களை விசாரிக்கும் விவகாரத்தில், அதிகாரப்பூர்வ முடிவில் இருந்து மாறுபடும் கருத்தை தேர்தல் ஆணையர்களில் யாரேனும் தெரிவித்திருந்தாலும், அது இறுதி உத்தரவில் இடம்பெறாது என தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரச்சாரத்தின்போது, நடத்தை விதிகளை மீறும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா மீதான புகார்களை தலைமைத் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது. இருப்பினும் 5 புகார்கள் மீதான விசாரணையின்போது, அசோக் லவசா மாறுபட்ட கருத்துகளை தெரிவித்ததாகவும், மற்ற இருவர் ஒரே கருத்தைக் கொண்டிருந்ததால் பெரும்பான்மை அடிப்படையில் இறுதி முடிவெடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. அதேசமயம், தமது மாறுபட்ட கருத்து இறுதி உத்தரவில் பதிவு செய்யப்படாததற்கு அதிருப்தியை தெரிவித்து அசோக் லவசா தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், இதற்கான எழுத்துபூர்வ ஆணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், தேர்தல் நடத்தை விதிமீறல் புகார் குறித்த விசாரணையின் இறுதி முடிவு மட்டுமே கட்சிகளுக்கு தெரிவிக்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.