​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாயமான இந்திய விமானத்தை தேடும் பணியில் 5000 கண்காணிப்பு விமானங்கள்

Published : Jun 07, 2019 5:04 PM

மாயமான இந்திய விமானத்தை தேடும் பணியில் 5000 கண்காணிப்பு விமானங்கள்

Jun 07, 2019 5:04 PM

அசாமில் மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் 5000 கண்காணிப்பு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 13 பேருடன் கடந்த 3-ந்தேதி அசாமின் ஜோர்காட் விமானப்படை தளத்தில் இருந்து அருணாசல பிரதேசத்தின் மென்சுகா விமானப்படை தளத்துக்கு சென்ற போது மாயமானது. விமானம் மாயமாகி 5 நாட்கள் ஆகியும் விடை கிடைக்கவில்லை.

சீன எல்லையில் மாயமான இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெறும் நிலையில்,  5000 கண்காணிப்பு விமானங்களையும் இந்த பணியில் ஈடுபடுத்தி உள்ளதாக மத்திய அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான ஆராய்ச்சி மையத்தின்  5000 கண்காணிப்பு விமானங்கள்,  உளவு செயற்கைக்கோள்கள் உள்ளிட்டவற்றை கொண்டு  விமானத்தை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.