​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்

Published : Jun 07, 2019 5:02 PM



கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்

Jun 07, 2019 5:02 PM

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி அருகே செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார். மேலும் இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கைக்கான நினைவு மரக்கன்றையும் நட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள 30 ஆயிரம் இடங்களை, அரசு இடங்களாக அறிவிக்க கோரி கல்லூரிகள் ஒப்படைத்திருப்பதாக தெரிவித்தார்.