​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
8 மற்றும் 9 ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு

Published : Jun 07, 2019 5:01 PM

8 மற்றும் 9 ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு

Jun 07, 2019 5:01 PM

ஆசிரியர் தகுதித்தேர்வு 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு  ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

கடந்த 2010ஆம் ஆண்டுக்கு பின் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களில் இதுவரை தகுதி தேர்வு முடிக்காதவர்கள் இந்த தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு  தேர்வில் பங்கேற்க 6 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

இந்த தேர்வுக்காக முதல் தாளுக்கு 471 மையங்களும் இரண்டாம் தாளுக்கு ஆயிரத்து 81 மையங்களும் என 32 மாவட்டங்களில் ஆயிரத்து 552 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  மொபைல் போன் உட்பட மின்னணு பொருட்களை தேர்வறைக்குள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.