​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

Published : Jun 07, 2019 1:25 PM

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

Jun 07, 2019 1:25 PM

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு கொல்கத்தா நகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார்.

மேற்கு வங்கத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை முறையாக நடத்தவில்லை என, கொல்கத்தா காவல் ஆணையர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாக்க கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒருமாதகாலம் அனுமதி பெற்றிருந்தார்.

இதனிடையே கடந்த மாதம் 27ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அன்றைய தினம் ஆஜராகாத ராஜீவ் குமார், வேறொருநாளில் ஆஜராவதாக சி.பி.ஐ.க்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில் வழக்கு தொடர்பான விசாரணைக்காக கொல்கத்தா சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று ஆஜரான அவரிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.