​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சர்கஸில் 3டி ஹோலோகிராம் மூலம் விலங்குகள் சாகசம்

Published : Jun 07, 2019 10:24 AM



சர்கஸில் 3டி ஹோலோகிராம் மூலம் விலங்குகள் சாகசம்

Jun 07, 2019 10:24 AM

ஜெர்மனியில் உள்ள சர்கஸில் 3டி ஹோலோகிராம் ((Holograms)) மூலம் அரங்கேற்றப்பட்ட விலங்குகளின் சாகசங்கள் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

image

சர்கஸ்களில் விலங்குகளை வைத்து சாகசங்களை நடத்துவதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நெதர்லாந்து, அயர்லாந்து மற்றும் மெக்சிகோவில் சர்கஸ்களில் விலங்குகளை வைத்து சாகசம் செய்வதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள ரன்கேள்ளி((Roncalli)) சர்கசஸில் உண்மையான விலங்குகளுக்கு பதிலாக 3டி ஹோலோகிராமை பயன்படுத்தி விலங்குகள் சாகசம் காட்டப்படுகிறது.

image

உலககிலேயே சர்கஸில் 3டி ஹோலோகிராம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.