​​ பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் - அன்புமணி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் - அன்புமணி

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் - அன்புமணி

Apr 16, 2018 4:43 PM

கல்லூரிப் பேராசிரியை மாணவியருக்குப் பாலியல் வலை விரித்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனப் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேராசிரியை நிர்மலாதேவி, சில பெரிய மனிதர்களின் பாலியல் தேவைகளுக்காக மாணவிகளுக்கு வலை விரித்திருப்பதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு அருகில் நின்று வீடியோ எடுக்கும் அளவுக்குத் தனக்குச் செல்வாக்கு இருப்பதாகப் பேராசிரியை தெரிவித்ததையும் குறிப்பிட்டுள்ளார். நிர்மலாதேவி பேசிய செல்பேசி எண்ணின் அழைப்புகளைக் கண்டறிந்தாலே இதன் பின்னணியில் உள்ள பெரிய மனிதர்களைக் கண்டுபிடித்து விடலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

15 நாட்களுக்குப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள அவர், அதைத் தன்னால் சமாளித்துவிட முடியும் எனக் கூறுவது அதிகாரத்தின் உச்சத்தில் உள்ளவர்களுடன் அவருக்குத் தொடர்புள்ளதைக் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.