​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாக்கு பதிவு எந்திரங்கள் மீது பொய் புகார் கூறினால் நடவடிக்கை என்ற சர்ச்சைக்குரிய விதிமுறை குறித்து மறுபரிசீலனை

Published : Jun 06, 2019 7:08 PM

வாக்கு பதிவு எந்திரங்கள் மீது பொய் புகார் கூறினால் நடவடிக்கை என்ற சர்ச்சைக்குரிய விதிமுறை குறித்து மறுபரிசீலனை

Jun 06, 2019 7:08 PM

ஓட்டுப்பதிவு எந்திரம் குறித்து பொய் புகார் கூறும் வாக்காளரை தண்டிக்கும் விதிமுறை மறுபரிசீலனை செய்யப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

தேர்தலின்போது, தங்களது ஓட்டு தவறாக பதிவாகி விட்டதாக, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அல்லது ஒப்புகை சீட்டு எந்திரங்கள் மீது புகார் கூறும் வாக்காளர், தேர்தல் நடத்தை விதிகள் 49எம்ஏ பிரிவின்படி, சோதனை ஓட்டு போட அனுமதிக்கப்படுவார். அதில் அவர் கூறியது பொய் என்று கண்டுபிடிக்கப்பட்டால், இந்திய தண்டனை சட்டம் 177-வது பிரிவின்படி அவர் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம்.

சமீபத்திய தேர்தலின்போது, இந்த தண்டனை விதிமுறை அறிவிக்கப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த விதிமுறை மறுபரிசீலனை செய்யப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்து விட்டதால், அந்த விதிமுறையை மாற்றி அமைப்பதா? தளர்த்துவதா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.