​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பாதிப்பு இல்லை - நாஸ்காம்

Published : Jun 06, 2019 12:52 PM

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பாதிப்பு இல்லை - நாஸ்காம்

Jun 06, 2019 12:52 PM

ஜப்பானின் புதிய தொழில் கொள்கை விதிகளால் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதிக்கப்படாது என நாஸ்காம் தெரிவித்துள்ளது.

ஜப்பானில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறையில் வெளிநாட்டு உரிமையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சைபர் செக்யூரிட்டி எனும் இணையவழிக் குற்றங்களில் இருந்து காக்கும் பொருட்டு இந்த நடவடிக்கையை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டமைப்பான நாஸ்காமின் மூத்த இயக்குநர் ககன் சபர்வால், இந்திய ஐ.டி துறை நிறுவனங்கள் சில ஜப்பானின் நிறுவனங்களை வாங்கவிருப்பதால், அவற்றுக்கு அந்நாட்டின் புதிய கட்டுப்பாடுகளின்படி பாதிப்பு நேராது எனத் தெரிவித்துள்ளார்.

இன்போசிஸ் நிறுவனம்  ஹிடாச்சி போன்ற அந்நாட்டு நிறுவன பங்குகளை வாங்கவிருப்பதாக கடந்த டிசம்பரிலேயே  தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.