​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெர்மனியில் திடீரென வீசிய சூறைக்காற்று

Published : Jun 06, 2019 6:14 AM

ஜெர்மனியில் திடீரென வீசிய சூறைக்காற்று

Jun 06, 2019 6:14 AM

ஜெர்மனி நாட்டில் சூறாவளி காற்று வீசியதில் பல வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன.

மேற்கு ஜெர்மனியில் உள்ள போச்சோல்ட் டவுனில் நேற்று பலத்த சூறைக்காற்று வீசியது. மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றில், வீடுகளின் மேற்கூரையில் இருந்த ஓடுகள் விழுந்து நொறுங்கின.

வீட்டின் கண்ணாடிகளும் நொறுங்கி சேதமடைந்தன. மேலும் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த கார்களும் காற்றின் வேகத்தில் தூக்கி வீசப்பட்டன. இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் தீயணைப்பு துறையினர், இதுவரை 4 கார்கள் மற்றும் 6 வீடுகள் திடீர் சூறைக்காற்றில் சேதமடைந்ததாகவும், மீட்பு பணி நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.