​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஊழியர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து சுவிக்கி நிறுவனம் விளக்கம்

Published : Jun 05, 2019 9:21 PM



ஊழியர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து சுவிக்கி நிறுவனம் விளக்கம்

Jun 05, 2019 9:21 PM

உணவு வினியோகிக்கும் தொகையை குறைத்ததை எதிர்த்து  ஊழியர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து சுவிக்கி நிறுவனம் விளக்கம் அளித்தது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே சுவிக்கி நிறுவன ஊழியர்கள் சுமார் 100 பேர் போராட்டம் நடத்தினர்.

அப்போது ஒவ்வொரு உணவு வழங்கலுக்கும் வழங்கப்பட்ட பழைய தொகையான 35 ரூபாயை மீண்டும் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  இந்நிலையில் சுவிக்கி நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கப்படும் வசதிகளை விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், விபத்து மற்றும் மருத்துவ காப்பீடு, கல்வி உதவி தொகை என பல்வேறு வசதிகளை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், ஊழியர்களின் நல்ல செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில் மாதந்திர விருது வழங்கப்படுவதாகவும் சுவிக்கி தெரிவித்துள்ளது.