​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரயில் நிலையங்களில் சுற்றித் திரியும் ஆதரவற்றோருக்கு கரம் கொடுக்கும் காவல்துறை

Published : Jun 05, 2019 6:43 PM



ரயில் நிலையங்களில் சுற்றித் திரியும் ஆதரவற்றோருக்கு கரம் கொடுக்கும் காவல்துறை

Jun 05, 2019 6:43 PM

மிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில், சுற்றித் திரியும் ஆதவற்றோர், மனநலம் குன்றியோர்களை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கும் நடவடிக்கையை ரயில்வே காவல்துறை தொடங்கி உள்ளது. 

மனநலம் பாதிக்கப்பட்டோர், குடும்பத்தினரால் கைவிடப்பட்டோர் மற்றும் யாசகம் கேட்டு வாழ்க்கையை நடத்துவோர் என பலரும் ரயில் நிலையங்களில் தங்கி வாழ்க்கையை கடத்தும் நிலை தொடர்ந்து இருந்து வருகிறது.

இதுபோன்று இருப்பவர்களை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க ரயில்வே போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதன் முதற்கட்டமாக தாம்பரம் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கபட்டோர் என 10 பேர் மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி செய்யப்பட்டது. உணவு மற்றும் உடைகள் வழங்கிய ரயில்வே போலீசார், அவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக மனநல ஆலோசனைகளை வழங்கினர். பின்னர் அவர்களின் குடும்பத்தாருடன் சேர்த்து வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. யாரும் இல்லாதவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர், காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ரயில்வே காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்றார். இதுபோன்று ரயில் நிலையங்களில் மீட்கப்படுவோரை தத்தெடுக்க 1512 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

இதே பணியினை தமிழ்நாடு முழுவதும் உள்ள 47 ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையின் கீழ் இதுவரை 85 ஆண்களும்,11 பெண்களும் மீட்கப்பட்டுள்ளனர்.