​​ ராமமோகன ராவை கைது செய்து விசாரிக்க ஜெயக்குமார் வலியுறுத்தல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராமமோகன ராவை கைது செய்து விசாரிக்க ஜெயக்குமார் வலியுறுத்தல்

ராமமோகன ராவை கைது செய்து விசாரிக்க ஜெயக்குமார் வலியுறுத்தல்

Apr 16, 2018 2:03 PM

முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவை கைது செய்ய விசாரிக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை தியாகராயநகரில் ஏழைபெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் உடன் இருந்ததாக ராம்மோகன்ராவ் பேசி இருப்பது பற்றி கேட்டதற்கு, யாருடைய குரலை பிரதிபலிக்கிறார் என்பதை ராமமோகன ராவை கைது செய்து விசாரித்து கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார்.