​​ காடு, மலை கடந்த காவிரி ஓட்டு அரசியல் தாண்ட முடியவில்லை - நடிகர் பிரகாஷ் ராஜ்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காடு, மலை கடந்த காவிரி ஓட்டு அரசியல் தாண்ட முடியவில்லை - நடிகர் பிரகாஷ் ராஜ்

காடு, மலை கடந்த காவிரி ஓட்டு அரசியல் தாண்ட முடியவில்லை - நடிகர் பிரகாஷ் ராஜ்

Apr 16, 2018 1:58 PM

காவிரி நீர்ப்பங்கீட்டில் உள்ள உண்மையான பிரச்னைகளையும், நடைமுறைத் தீர்வுகளையும் தமிழக-கர்நாடக மக்களுக்கு விளக்க இரு தரப்பிலும் அக்கறை கொண்ட வல்லுனர்களோடு ஆவணப்படம் எடுக்கவிருப்பதாக நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், இரு மாநிலங்களின் விவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரியில் என்று அரசியல் கலந்ததோ, அன்றே அது கரைபடத் தொடங்கியதாகக் கூறியுள்ளார். காடு, மலை என பல தடை கடந்த காவிரியால், ஓட்டு அரசியல் சூழ்ச்சியை கடக்க முடியவில்லை என்றும், வேதனை தெரிவித்துள்ளார்.  இருமாநில அரசுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஏற்படுத்தி எப்போதோ தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய காவிரி பிரச்னையை அதிகார மீன் பிடிக்க ஒத்திப் போடுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.