​​ காவிரிப் போராட்ட வழிமுறைகளை மாற்றப் போவதாக வேல்முருகன் பேச்சு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவிரிப் போராட்ட வழிமுறைகளை மாற்றப் போவதாக வேல்முருகன் பேச்சு

காவிரிப் போராட்ட வழிமுறைகளை மாற்றப் போவதாக வேல்முருகன் பேச்சு

Apr 16, 2018 6:52 PM

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால், மேட்டூரில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான  மால்கோ நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயத்துக்குத் தண்ணீர் கிடைக்காத நிலையில் மேட்டூரில் உள்ள மால்கோ நிறுவனம் காவிரியில் இருந்து 10டிஎம்சி தண்ணீரை எடுத்துப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார். எங்கிருந்து எப்படித் தண்ணீர் எடுக்கப்படுகிறது என்கிற தகவல்களை எல்லாம் தான் திரட்டியுள்ளதாகவும் காவிரிப் போராட்ட வழிமுறைகளை மாற்றப்போவதாகவும் வேல்முருகன் தெரிவித்தார்.