​​ மசாஜ் சென்டரில் பணிபுரியும் பெண்களை மிரட்டி பணம் பறித்து சென்ற பினுவின் கூட்டாளிகள் 3 பேர் கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மசாஜ் சென்டரில் பணிபுரியும் பெண்களை மிரட்டி பணம் பறித்து சென்ற பினுவின் கூட்டாளிகள் 3 பேர் கைது

மசாஜ் சென்டரில் பணிபுரியும் பெண்களை மிரட்டி பணம் பறித்து சென்ற பினுவின் கூட்டாளிகள் 3 பேர் கைது

Apr 16, 2018 1:24 PM

சென்னை மேற்கு மாம்பலத்தில் மசாஜ் சென்டரில் புகுந்து அங்கு பணிபுரியும் பெண்களை மிரட்டி பணம் பறித்துச் சென்ற ரவுடி பினுவின் கூட்டாளிகள் 3 பேர் சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு 8 மணியளவில் ஹைரேஞ்ச் ஹோலிஸ்டிக் ஸ்பா என்ற மசாஜ் சென்டரில் கத்தி அரிவாளுடன் 3 ரவுடிகள் புகுந்தனர். அவர்கள் அங்கு பணிபுரியும் 2 பெண்களை மிரட்டி பணம், செல்ஃபோன்கள், நகைகளை பறிக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய போலீசார் ரவுடி பினுவின் கூட்டாளிகளான பல்லாவரத்தைச் சேர்ந்த சித்தார்த் ராஜன் மற்றும் சம்சு ஹிம்மத், சுதாகர் ஆகியோரை கைது செய்துள்ளனர். ரவுடி பினுவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சித்தார்த் ராஜன் பிணையில் வெளிவந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளான்.