​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடியரசு தலைவர் விருதுக்கான விளம்பரத்தில் தமிழ் மொழி விடுபட்ட விவகாரம், மறு அறிவிப்பு வெளியிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Published : Jun 04, 2019 9:37 PM



குடியரசு தலைவர் விருதுக்கான விளம்பரத்தில் தமிழ் மொழி விடுபட்ட விவகாரம், மறு அறிவிப்பு வெளியிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Jun 04, 2019 9:37 PM

குடியரசு தலைவரின் விருதிற்கு, தமிழ் மொழியை தவிர்த்துவிட்டு விளம்பரம் செய்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

உடனடியாக, தமிழ் மொழியையும் சேர்த்து, மறு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். அண்மையில், வெளியான விளம்பரம் ஒன்றில், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், புலமை பெற்றிருப்பவர்கள் குடியரசு தலைவர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில், முதன்முதலில், செம்மொழி தகுதியைப் பெற்ற தமிழ் இடம்பெறவில்லை. இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், குடியரசு தலைவரின் விருதிற்கு, தமிழ் மொழியை தவிர்த்துவிட்டு விளம்பரம் செய்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

உடனடியாக, தமிழ் மொழியையும் சேர்த்து, மறு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், மேலும், விருதுக்கு, விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக, கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும், மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.